Sunday 26 September 2010

பிள்ளையார் பிடிக்க...

 விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்.  சனி கிழமை தான் வருகிறது - கொழுக்கட்டை / பூஜை முதலியன செய்துவிடலாம்... ஆனால் ஒரு முக்கியமான கேரக்டர் வேண்டுமே?

நம் நாட்டில் இருந்தால் - ஊர் ஜே ஜே என்று இருக்கும்... ஒரு பைக்கும் பேகும் இருந்தால் போதும்... பிள்ளையாரில் இருந்து / வாழைப்பழம் / பல விதமான பூ / இலைகள் எல்லாம் வாங்கிவிடலாம்...

இங்கே சௌத்ஹாம்டன் (southampton) கண்டிப்பாக பிள்ளையார் கடையில் விற்க மாட்டான்... படம் (ஆபீஸ் பிரிண்டர் உபயம்) வைத்து செய்யவும் மனசு வரவில்லை.

என் மனைவி அப்போதுதான் களிமண் கிடைத்தால் "நானே பிள்ளையார் பிடிக்கிறேன்" என்றாள் - "தேவையா - ஆகற வேலையா சொல்லு - கொழுகட்டையே சுமார்தான் உனக்கு வரும்... இதில பிள்ளையார் வேறயா?" என்று கூறி விட்டு ஆபீஸ் போனேன்

வீட்டிற்க்கு வந்தால் சர்ப்ரைஸ் - தொப்பையும் தொந்தியுமாக இல்லாமல் 'kellogs speacial K cornflakes' சாப்பிடும் ஒரு அத்லெட் மாதிரி விநாயகர் "எப்பூடி" என்று பசங்க படத்தில் வரும் சிறுவன் போல சிரிக்கிறார் - என் மனைவி "early leraning centre" -இல் களிமண் வாங்கி வந்து பிள்ளையார் பிடித்து வைத்து இருந்தாள்.

பிள்ளையார் பிடிக்க பிள்ளையார் மாதிரியே வந்து இருந்தது... ப்ளாக் எழுத ஆரம்பிக்க இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வருமா என்ன?

பூஜை முடிந்து பல நாட்கள் ஆகின்றது கரைக்க மனம் வராமல் அப்படியே இருக்கிறார் விநாயகர்!

No comments:

Post a Comment