Sunday 26 September 2010

கல்யாணம் பண்ணிப்பார்

அண்மையில் திருமண மண்டபம் பற்றி குறிப்பு ஒன்று தினமலரில் படித்தேன்.


கீழே இருப்பவை நான் கற்றது.  உங்கள் அனுபவங்களையும் சொல்லலாமே?


* நாள் வாடகையில் எதெல்லாம் சேர்க்க பட்டு இருக்கிறது என்று செக் செய்ய வேண்டும்.  நல்ல அனுபவம் உள்ள நபரை அழைத்து செல்ல வேண்டும்

*  பந்தல் : இது கல்யாண மண்டபத்தில் வாசலில் முன்னே எப்போதும் இருக்கும்.  சில இடத்தில் துணியிலும் பல இடத்தில் இரும்பிலும் இருக்கும்.  இது பத்து ஆண்டுக்கு  முன்பாக வேய்த்ததாக இருக்கும் - நமக்காக செய்தது இல்லை - (வேண்டாம் என்றும் கூற முடியாது).   ஆனால் இதற்கும் வாடகை உண்டு.

*  ஜெநேறேடர் : உபகோயம் செய்தாலும் இல்லாவிட்டாலும் இதற்கு வாடகை.   கரண்ட் கட் ஆனால்தான் தெரியும் வேலை செய்கிறதா என்று - முதலிலேயே செக் செய்யவில்லை என்றல் பிறகு 'மானாட மயிலாட' மாதிரி மேனேஜரிடம் டான்ஸ் ஆட வேண்டியதுதான் -  டீசல் செலவு டீசல் வாங்கி வர டிப்ஸ் தனி செலவு.

* மண்டபத்தில் வேலை ஆட்கள் எவ்வளவு பேர் என்று கேட்கவில்லை என்றால் நீங்கள் காலி.  இரண்டு மூன்று மண்டபம்கள் இருக்கும் இடத்தில் நாம் மட்டும் கல்யாணம் செய்தால் எல்லா வேலை ஆட்களும் பந்தி நேரத்தில் மட்டும் வந்து டென்ஷன் தருவார்கள் - மற்ற நேரத்தில் நான் இந்த மண்டபம் இல்லை 'annex' என்று பதில் வரும்.

* இதில் டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்

*  பாத்ரூம் எதுவும் க்ளீனாக இருக்காது - கேட்டால் பினாயில் ஊற்றி விட்டு போவர்.  வெய்யில் காலாமாக இருந்தால் ஓகே - குளிர் காலத்தில் கல்யாணம் செய்தால் சுடு தண்ணீருக்கு... வேறன்ன அதே மானாட... தான்!

*   எல்லாம் முடிந்து அப்படா என்று கிளம்ப நினைத்தால், வேலை ஆட்களின் மேஸ்திரி 'யாருக்கும் நீங்க ஒன்னும் கொடுக்க வேணாம் எனக்கு மட்டும் 500 ரூபா கொடுங்க நான் பாத்துக்கறேன் (!)' என்று வாங்கி கொண்டு எஸ்கேப் ஆவார், எல்லா வேலை ஆட்களும் தலையை சொரிந்து கொண்டு நிற்பார்கள்...

சும்மாவா சொன்னார்கள் கல்யாணம் பண்ணிப்பார் என்று?





No comments:

Post a Comment